மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை மன்னாரில் மாபெரும் அமைதிப்போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமற்போன,கடத்தப்பட்டவர்களை கண்டறியக் கோரியும், திருக்கேதீஸ்வர மனித புதை குழி தொடர்பான விசாரணை கோரியும் குறித்த அமைதிப்போராட்டம் இடம் பெற்றது.
-மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் அமைதி ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.