1.7 தொன் எடையுள்ள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.பத்து மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள இந்தப் போதை பொருள் ஸ்பெயினில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pyrenees-Atlantique ஐச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் பிரெஞ்சு – ஸ்பெயின் எல்லையான Hendaye பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். இவ்வருடத்தில் மீட்கப்பட்டுள்ள அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரஊர்தி வாகனம் ஒன்றை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள். குறித்த வாகனத்தில் ஒரு சாரதி மாத்திரமே இருந்துள்ளார். போதைப்பொருட்களை கொள்கலனில் அடியில் பதுக்கி வைத்துக்கொண்டு மேலே பொருட்கள் ஏற்ற திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சுங்கவரித்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1647 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 68 கிலோ எடையுள்ள கஞ்சாச்செடியும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.