மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் உட்பட நால்வருக்கு பிணை

0
123


மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட 4 பேரையும் தலா 20,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா அனுமதியளித்துள்ளார்.
அத்துடன், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
கடந்த 28 ஆம் திகதி மேற்படி வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்புப் பேரணியின்போது, மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நின்ற பொலிஸாரையும் மாவட்டச் செயலக அதிகாரிகளையும் கடமையைச் செய்யவிடாது இவர்கள் இடையூறு விளைவித்தார்கள் எனவும் சுமூகமான நிலைமையைக் குழப்பும் வகையில் இவர்கள் நடந்துகொண்டார்கள் எனவும் கூறி மேற்படி 4 பேருக்கும் எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்புப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை அடுத்து, இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகுமாறு கூறி நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவர்கள் நீதிமான்றத்தில் இன்று ஆஜராகியபோது, இவர்களைப் பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதியளித்தார்.
மேலும், மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகள் நடத்திவரும் சத்தியாக்கிரகப் போரட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்குமாறு கோரி மட்டக்களப்பு பொலிஸார் தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கை நீதவான் எம்.கணேசராஜா நிராகரித்து தள்ளுபடி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here