இந்திய மீனவர் ஒருவர், சிறீலங்கா கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக, சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது ஹன்சாரிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இடம்பெற்ற, 20ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் பங்குபற்றிய நிலையிலேயே, குறித்த இருநாட்டு தலைவர்களும் சிறீலங்கா கடற்படை, இந்திய மீனவர்களை சுட்ட விவகாரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது சிறீலங்கா கடற்படை தரப்பு குறித்த விடயம் தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தொடர் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.