தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் நடாத்தி வரும் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளில் இந்த வருடத்திற்கான கரம்,சதுரங்கப்போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்டப் போட்டி மிகவும் சிறப் பாக நடைபெற்றது. பிரான்சின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நியுலி சூர்மான் பிரதேசத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடன் போட்டிகள் ஆரம்பித்திருந்தன.
ஈகைச்சுடரினை 19.06.1998 அன்று கறிப்பட்டமுறிப்பு பிரதேசத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட 2ம் லெப் ஒளியவன் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.
தமிழர் விளையாட்டுத்துறையின் மெய்வல்லுனர் போட்டிக்குழுவினர் மிகவும் நேர்த்தியாக நேரங்களை கணக்கிட்டு ஒவ்வொரு போட்டிகளையும் நடாத்தியதோடு பங்கு பற்றிய கழகங்களின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் போட்டிகளின் சிறந்த புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் விளையாட்டில் ஈடுபட்டனர். நடுவர்களின் நடுநிலைத்திறனினால் எல்லாப் போட்டிகளும் அனைவருக்கும் திருப்தியாக அமைந்திருந்தது.
மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றிச் சிறப்பித்த கழகங்கள் பின்வருமாறு:
1. தமிழர் விளையாட்டுக்கழகம் 93
2. தமிழர் விளையாட்டுக் கழகம் 94
3. யாழ்டன் விளையாட்டுக்கழகம்
4. நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம்
5. அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம்
6. பாடும்மீன் விளையாட்டுக்கழகம்
7. அமலன்ஸ் விளையாட்டுக்கழகம்
8. இணுவில் விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கள் பற்றியிருந்தன.
போட்டிகளில் முறையே 15 வயதிற்குட்பட்டோர் ஆண்கள், பெண்கள், 19 வயதிற்குக் உட்பட்டோருக்கும், 19 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டமும், இரட்டையர் ஆட்டம் 19 வயதிற்கு மேற்ப்பட்டோர், 19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்பெண் இருபாலாருக்குமான போட்டிகளும்நடைபெற்றன.
1ம் இடம் : லிங்கேஸ்வரன் ( யாழ்டன் வி.கழகம் )
2ம் இடம் : ரூதன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
3ம் இடம் : நோ.நிந்துசன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
4ம் இடம் : பிரசன்னா ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
ஆண்கள் ஒற்றையர் 19 வயதிற்குட்பட்டோர்
1ம் இடம் : லக்சியோன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 94 )
2ம் இடம் : யோநாதன் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
3ம் இடம் : ஆ.ஆகாஸ் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
4ம் இடம் : றொமாஜெராட் ( யாழ்டன் வி.கழகம்)
ஆண்கள் ஒற்றையர் 19 வயதிற்கு மேற்பட்டோர்
1ம் இடம் : பிதீபன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
2ம் இடம் : நிசாந்தன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
3ம் இடம் : ரதிராஜ் ( யாழ்டன் வி. கழகம்)
4ம் இடம் : கிசாந் ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
பெண்கள் ஒற்றையர் 15 வயதிற்குட்பட்டோர்
1ம் இடம் : சி. சமிதா ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
2ம் இடம் : ந. லக்சயா ( யாழ்டன் வி. கழகம்)
3ம் இடம் : த. பானுசா ( யாழ்டன் வி. கழகம்)
4ம் இடம் : இ. ஆர்த்தி ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
பெண்கள் ஒற்றையர் 19 வயதிற்குட்பட்டோர்
1ம் இடம் : வி. அசினி ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
2ம் இடம் : செ. தேரிசிகா ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
3ம் இடம் : பா. அனுசியா ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 94 )
4ம் இடம் : டொ.சுயேந்தா ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
பெண்கள் ஒற்றையர் 19 வயதிற்குமேற்ப்பட்டோர்
1ம் இடம் : வ. கஸ்தூரி ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
2ம் இடம் : பு.அனித்தா ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 93 )
3ம் இடம் : சூ. கயீனா ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
4ம் இடம் : சா. தர்மிகா ( பாடுமீன் வி.கழகம்)
பெண்கள் இரட்டையர் 19 வயதிற்கு உட்பட்டோர்
1ம் இடம் : லக்சிகா – தேனுகா ( யாழ்டன் வி.கழகம்)
2ம் இடம் : சமிதா – ஆசினி ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
3ம் இடம் : அனுசியா – சோனா ( தமிழர் விளையாட்டுக்கழகம் – 94 )
4ம் இடம் : சுவேதா – நிவேதா (
பெண்கள் இரட்டையர் 19 வயதிற்கு மேற்ப்பட்டோர்
1ம் இடம் : சூரியகுமார் – கயீனா, பரராசா – அஐந்தா ( நல்லூர் ஸ்தான் வி.கழகம் )
2ம் இடம் : விமலேந்திரன் – தர்சி , கணேசலிங்கம் நிலானி ( நல்லூர் ஸ்தான் வி.கழகம்)
3ம் இடம் : சாம்சனர் – தர்மிகா, சாம்சன் கைசி ( பாடும்மீன் வி.கழகம்)
ஆண்கள் இரட்டையர் 19 வயதிற்கு உட்பட்டோர்
1ம் இடம் : ஆதிரையன் – லதீசன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 94)
2ம் இடம் : ரோமா – நிறைக்சன் ( யாழ்டன் வி.கழகம்)
3ம் இடம் : நிவேதன் – நிந்துசன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
4ம் இடம் : ஜெயதிசன் – தமிழவன் ( யாழ்டன் வி.கழகம்)
ஆண்கள் இரட்டையர் 19 வயதிற்கு மேற்பட்டோர்
1ம் இடம் : பொபி, பிரதீபன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
2ம் இடம் : கரன் நிசாந்தன் ( தமிழர் விளையாட்டுக்கழகம் 93)
காலநிலை நிலைமைக்கு ஏற்றாற் போல் இல்லாத போதும் போட்டிகள் யாவும் திறம்பட நடைபெற்று மாலை
19.00 மணிக்கு நிறைவுக்கு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)