விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியவர் 18 வருடங்களின் பின் விடுதலை

0
105

 

யாழ்ப்பாணம் கொம்படி பகுதியில் விமான படையினரின் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஒருவரை விடுதலை செய்து இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்ற குறித்த சம்பவத்தில் விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் உட்பட நான்கு விமானப்படையினருக்கும் மரணத்தை விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபரால் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு யூன் மாதம் 13 ஆம் திகதி இவர் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்
குறித்த வழக்கு விசாரணையானது இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயேச்சையாக சுதந்திரமாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படவில்லை என கடந்த 17 ஆம் திகதி வழக்கின் போது கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்பதை மன்றுக்குத் தெரிவிக்குமாறு அரச சட்டவாதிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்,வழக்கில் மேலதிக விசாரணை எதுவும் செய்யவில்லை எனவும் வழக்கத் தொடுனர் தரப்பு வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அரச சட்டத்தரணி மன்றிறல் தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிரிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் குறித்த நபரை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குற்றமற்றவர் என தெரிவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here