கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமெனக் கோரி முன்னெடுக்கும் போராட்டம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர் கின்றது . கேப்பாப்புலவில் அமைந் துள்ள முல்லைத் தீவு சிறீலங்கா இராணுவ தலைமையகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறீலங்கா இராணுவம் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் மக்களின் குடியிருப்பு காணிகள், ஆலயங்கள் ,வயல் நிலங்கள், தோடட காணிகள் உள்ளிடட அனைத்தையும் கையகப்படுத்தி வைத்துக்கொண்டு கடந்த 8வருடங்களாக நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களிலும் பல்வேறு விதமான முறையில் தமது காணிகளை கோரி கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும் வாக் குறுதிகளை நம்பி போராட்டங்களை கை விட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் இனி ஒருபோதும் எந்த வாக்குறுதிகளையும் நம்ப தயாரில்லை என தெரிவித்து தொடர் போராடடத்தில் குதித்துள்ளனர்.