டெல்லியில் கோலாகலமாக நடைபெற்ற 66வது குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்றார் ! (காணொளி)

0
497

Republic-Day-Modi-Obama_Reutersநாட்டின் 66-வது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்றார்.

டெல்லியில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குடியரசு தின நிகழ்ச்சிகள் சற்று தாமதமாகத் தொடங்கியது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு முதலில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னமான அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார்.

கடந்த சுதந்திர தினத்தைப் போல இம்முறை தலைப்பாகை அணிந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி பின்னர் குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு முதலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரான அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா மனைவியுடன் தமது தனி வாகனத்தில் வருகை தந்தார்.

பொதுவாக குடியரசு தின விழாவுக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர் ஜனாதிபதியின் வாகனத்தில் அழைத்துவரப்படுவது வழக்கம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா, அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமது பீஸ்ட் வாகனத்தில் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை தந்தார்.

இதன்போது இராணுவ அணிவகுப்பு , சகாச நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான போரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.    அதற்கான விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து முகுந்த் வரதராஜனின் மனைவி பெற்றுக் கொண்டார்.
[mom_video type=”youtube” id=”/buPvrN14Q7c”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here