காங்கேசன்துறை கடற்கரையில் 29 ஏக்கர் காணி ஏப்ரலில் விடுவிக்கப்படுமாம் !

0
199

காங்­கே­சன்­து­றைப் பகு­தி­யில் கடற்­க­ரை­யோ­ர­மாக சிறீலங்கா படை­யி­னர் ஆக்கிரமித்துள்ள 29 ஏக்­கர் காணி எதிர்­வ­ரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திக­திக்கு முன்­ன­தாக உரி­ய­வர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­டும் என்று சிறீலங்கா பாது­காப்பு அமைச்­சின் பதில் செய­லா­ளர் நேற்­றைய தினம் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார் என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லா­ளர் நா.வேத­நா­ய­கன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, காங்கேசன்துறையில் கடற்கரையோர மாக படையினர் வசமுள்ள நிலங்களில் மேலும் 29 ஏக்கர் நிலம் எதிர்வரும் ஏப்பிரல் 10ஆம் திகதிக்கு முன்பாக மக்களிடம் ஒப்படைக்கப்படும். காங்கேசன்துறை தல்செவன உல்லாச விடுதிக்கும் ஊறணியில் விடப்பட்ட தற்காலிக இறங்குதுறைப் பிரதேசத்துக்கு கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் முதன்மைச் சாலைக்கும் கடல்கரைக்கும் இடையே விடு விக்கப்படும் காணிகள் உள்ளடங்குகின்றன- என்றார்.
தற்போது நடைபெறும் ஐநா சபையின் கூட்டத் தொடரில் சிறீலங்கா அரசு தாம் ஆக்கிரமித்த மக்கள் நிலங்களை விடுவித்து வருவதாக காட்டவே இந்த நடவடிக்கை. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் மக்கள் வாழ் நிலங்களும் குடியிருப்புக்களும், வாழ்வாதார விவசாய நிலங்களும் சிறீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here