இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி.!

0
613

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தார். கச்சத்தீவு அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிச்சோ என்ற மீனவர் உயிரிழந்தார். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போது துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

300 படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனிடையே இந்திய கடல் எல்லையான ஆதம்பாலம் என்ற பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்கள கடற்படை சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிச்சோ  (22) என்ற மீனவருக்கு கழுத்தில் குண்டு பாய்ந்தது. கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கரைக்குத் திரும்பிய போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அச்சமடைந்த மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான கரைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here