தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஈருருளிப்பயணமானது ஒன்பதாவது நாளாகவும் நேற்று தொடர்ந்திடருந்தது.
குறித்த ஈருருளிப்பயணம் நேற்று Bözingenstrasse 26A
2502 Biel/Bienne Switzerland என்னும் இடத்தில் இருந்து ஏழு மனித நேய ஆவலர்களுடன் ஆரம்பமாகி Lausanne நகரை நோக்கி சென்றது.
இதேவேளை நேற்றைய தினத்தில் ஈருருளிப் பயணத்தில் ஈடுபட்ட அனைத்து செயற்பாட்டாளர்களும் அடையாள உணர்வு தவிர்ப்பை மேற்கொண்டனர்.
மேலும் இந்த ஈருருளிப்பயணம் 7 பேர் கொண்ட ஈருருளிப் பயணமாக அமைந்ததோடு, அவுஸ்திரேலியாவில் இருந்தும் வருகை தந்திருந்த மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவரும் இப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தார்.