கிழக்கிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்

0
610

 

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கையளிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், திருகோணமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுக்கான நீதி உடனடியாக கிடைக்கப்பெறவேண்டும், அரசியல் கைதிகளாக்கப்பட்ட உறவுகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here