வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றாதீர்கள்

0
112

தமக்கு அரச வேலை தரவேண்டும் என்று கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை அல்லாமல் நியமனங்களை வழங்கவேண்டும்.
இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஒன்றியம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசானது ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகங்களுக்கு அதிகளவு மாணவர்களை உள்ளீர்ப்பது வரவேற்க தக்கது. இருப்பினும்இ உள்ளீர்க்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவுடன்இ தாங்கள் சிரமப்பட்டுப் படித்த படிப்பிற்குப் பொருத்தமான வேலைவாய்ப்பை பெற முடியாமல இருப்பது கவலைக்குரியது.
நியமனங்கள் வழங்குவதில் ஏற்படுகின்ற தாமதத்தால் வருடா வருடம் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து குறித்த ஒரு வேலைக்கு போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. இது பெரும்பாலானவர்களை வேலையில்லாப் பட்டதாரிகள் எனும் அவல நிலைக்குத் தள்ளுகிறது.
அதுமாத்திரமன்றி அரச நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமையும்இ வேதனைக்குரியது. எனவே அவரவர் திறைமைக்கு ஏற்ற வகையில் பக்கச்சார்பற்ற நியமன்ஙகள் வழங்கப்படவேண்டியது அவசியம்.
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடு்க்கப்படுகின்ற தொடர்ச்சியான போராட்டமானது தவிர்க்கப்படமுடியா ஒன்றாகும். கடந்த காலங்களிலும் இவ்வாறான போராட்டங்கள் முன்னொடுக்கப்பட்டன. எனினும் அவை அப்போது வழங்கப்பட்ட பொய்யான வாக்குறுதிகளை நம்பிக் கைவிடப்பட்டதால் வெற்றியளிக்கவில்லை என்பதே உண்ம. எனவே அவ்வாறான வாக்குறுதிகளை வெறுமனே வழங்குவதைவிடுத்து வடக்கு மாகாணப் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்குச் செவிசாய்த்து உரிய தீர்வுகளை குறுகிய காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என உரியவர்களை கேட்டு கொள்கின்றோம்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here