கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை கிழமை 13ஆவது நாளாக தொடர்கின்றது.
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி இன்று உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு துணியால் கண்ணைக் கட்டியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எமது உறவுகளுக்கு இன்னமும் பதிலளிக்காது இந்த அரசு பாரா முகமாக இருக்கின்றது என்பதனைக் சுட்டிக்காட்டவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு துணியால் கண்ணைக் கட்டியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் எனவும் இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜ.நா. கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும் போராட்டத்தினால் ஈடுபட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டது.
தமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.