மரங்களுக்கு கீழ் தறப்பாள் கூடாரங்களை அமைத்து வாழும் பிலாக்குடியிருப்பு மக்கள்

0
418

பிலக்­கு­டி­யி­ருப்­புக் காணி­க­ளுக்­குச் சென்­றுள்ள மக்­கள் அங்கு மரங்­க­ளுக்­குக் கீழ் தற்கா­லிகக் கூடாரங்­களை அமைத்­துத் தங்­கி­யுள்­ள­னர்.
பிலக்­குடி ­யிருப்­புப் பகு­தி­யில் உள்ள தமது காணி களை விடு­விக்­கக் கோரி கடந்த ஒரு மாத காலமாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் கடந்த புதன்கிழமை (01.03.17) தமது காணிகளுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.
தமது காணிளை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அங்கேயே தங்கியுள்ளனர். தற்காலிகக் கொட்டகைகளை அமைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் மக்கள் மரங்களுக்கு கீழ் தறப்பாள் கூடாரங்களை அமைத்துத் தங்கி உள்ளனர்.
தற்போது மழை பெய்து வருவதால் குழந்தைகளுடன் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here