அமெரிக்க கடற்படை கப்பலான யு எஸ் என் எஸ் போல் ரிவர் (USNS Fall River) திங்கட்கிழமை கொழும்பு வருகிறது .
46 அம்ச பயிற்சி திட்டங்களை சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து 13 நாட்கள் முன்னெடுப்பதற்காகவே அமெரிக்க கடற்படையின் ஆசிய கட்டளை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்த மீட்பு , அவசர உதவி மற்றும் மீட்பு போன்ற பிரதான திட்டங்களை முன் வைத்து அமெரிக்க மற்றும் சிறீலங்கா கடற்படையினர் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்பட உள்ளனர்.
அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யு எஸ் என் எஸ் போல் ரிவர் இவ்வாறான கூட்டு பயிற்சிகளில் தெற்காசியாவில் முன்னெடுக்கின்றமை இதுவே முதலாவது சந்தர்ப்பம் என அமெரிக்க கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து சிறீலங்கா நோக்கிய பயணத்தை வியாழக்கிழமை இந்தக் கப்பல் ஆரம்பித்தது. தெற்காசியாவில் முதலாவது மனிதாபிமான மற்றும் அனர்த்த, நிவாரண முன்னாயத்த ஒத்திகையை மேற்கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் இந்த அதிவேக போக்குவரத்துக் கப்பல் சிறீலங்கா வருகை தரவுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .