ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா பிரதேச செயலக பிரிவினுடைய அந்த ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட காணிகளுக்குள் வாழுகின்ற சிங்கள மொழி பேசுகின்றவர்களை இப்போது எங்களுடைய பிரதேச சபைகளுடன் இணைப்பதற்கானதொரு சதி முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்த வைத்தியசாலை கட்டிடத்தொகுதியை நேற்றுமுன்தினம் திறந்து வைக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நாங்கள் எல்லை மீள் நிர்ணய சபைக்கு கூறியிருக்கின்றோம் ஒட்டு மொத்தமாக சிங்கள மொழி பேசுகின்ற எங்களுடைய உறுப்பினர்களின் அனுமதியோடு அந்த மக்கள் கூட உதாரணத்திற்கு நெடுங்கேணியை எடுத்து பார்த்தீர்கள் என்று சொல்லி சொன்னால், 4 வட்டாரங்கள் சிங்கள மொழி பேசுகின்ற தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட அந்த 4 வட்டாரங்களிலும் வாழுகின்ற மக்களை வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைத்திருக்கின்றார்கள்.
அந்த இரண்டு பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட பிரதேசத்திற்கும், எங்களுடைய வவுனியா வடக்கு பிரதேசசபை பகுதிக்கும் இடையில் பாரியதொரு அடர்ந்த பெரியதொரு காடு ஒன்று இருக்கின்றது. இடையில் பாதையில்லை. அவர்கள் பிரதேச செயலாளர் பிரிவு வெலியோயா என்று சொல்லி மணலாறு முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருகின்றது.
அவர்கள் பிரதேச செயலாளர் பிரிவு முல்லைத்தீவு மாவட்டம் அவர்கள் வாக்கு போடுவது வவுனியா மாவட்டம் நிர்வாக ரீதியாக பல பிரச்சினைகள் வடமத்திய மாகாணம்.
இப்படியாக 3 மாகாணங்களுக்கு கீழ் வைத்துக்கொண்டு அரசியல் தேவைக்காக மாத்திரம் அவர்களை கொண்டு வந்து வவுனியா வடக்கு பிரதேச சபைக்குள் கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். இதனை நாங்கள் வன்மையாக எதிர்ப்போம். நிச்சயமாக நாங்கள் அப்படி செய்ய முடியாது.
100 வீதம் தமிழ் மக்கள் வாழுகின்ற இடத்தில் அதே எண்ணிக்கையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியமர்த்திவிட்டு இப்போது நான்கு உறுப்பினர்கள் தானாகவே வரப்போகிறார்கள்.
வவுனியா வடக்கில் நாங்கள் அங்கு எல்லோருக்கும் சேர்ந்து அந்த மக்களே 44வது பிரதேச சபையினுடைய அமர்வில் வவுனியா வடக்கில் கடிதத்தை கொடுத்திருகின்றார்கள்.
அந்த பிரதேச சபை உறுப்பினர்கள் எங்களுக்கு வவுனியா வடக்கோடு இணைந்திருப்பது பாரிய சிக்கல் நாங்கள் பிரதேச சபைக்கு இங்க வரவேண்டும். பிரதேச செயலகத்திற்கு வெலியேயா போக வேண்டும். ஏனையவைக்கு நாங்கள் அனுராதபுரம் போக வேண்டும்.
எங்களை வவுனியா தெற்கு பிரதேச சபையுடன் இணையுங்கள் என்று அவர்களாகவே கடிதம் எழுதி கொடுத்திருக்கின்றார்கள். நாங்களும் அதனையே செய்யுங்கள் என்று சொல்லி சொன்னோம். சிங்களம் பேசுகின்ற மாகாணசபை உறுப்பினர்களும் அதனையே செய்யுங்கள் என்றும் கூறினார்கள்.
நேற்றுமுன்தினம் நான் அறிந்தேன் அந்த 4 வட்டாரங்கள் மாத்திரமல்ல என்னும் இரண்டு வட்டாரங்களை இங்கால் சேர்த்து இந்த எல்லை நிர்ணய சபை அப்படியொரு எல்லை மீள் நிர்ணயத்தை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றோம்.
இப்படி என்று சொன்னால் நாங்கள் போய் இதை யாரிடம் சொல்வது. எங்களுக்கு நீங்கள் தந்த நம்பிக்கை. எங்களுக்கு மாவட்ட செயலாளர் அலுவலக கூட்டத்தில் நீங்கள் ஒத்துகொண்ட விடயங்களை நீங்கள் செய்யவில்லை.
என்ன செய்வீர்கள் களவாக இழுத்தடிப்பு செய்து எங்களுடைய வவுனியா மாவட்டத்தையும் ஒரு திருகோணமலையாகவோ, ஒரு அம்பாறையாகவோ மாற்றுவதற்கு எங்களுடைய இன விகிதாசாரத்தை வவுனியா மாவட்டத்திற்கு மாற்றி தங்களுடைய நோக்கங்களை ஈடு செய்வதற்காக திரை மறைவிலே பலர் இயங்கி கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் தான் எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அற்ப சொற்ப இந்த அதிகாரங்களை கொண்ட இந்த மாகாண சபை கூட நாங்களே இயங்க விட முடியாமல் இயங்க முடியாமல் நாங்களே தடையாக இருப்பது மிகவும் மனவருத்தத்திற்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது.
ஆகவே யார் என்னத்தை சொன்னாலும் நாங்கள் எங்களுக்கு வாக்கு போட்ட இந்த மக்களுக்காகவும் இது எங்களுடைய பிரதேசம் என்ற உரிமையோடும் நாங்கள் இந்த பிரதேசத்திற்காக பலவற்றை இழந்திருக்கின்றோம் என்ற உண்மையையும் மனத்தில் கொண்டு மனச்சாட்சிக்கு நீதியாக உங்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் நீதியாக செயற்படுவோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.