கேப்பாபுலவின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டது என்ற மாயையை ஏற்படுத்தலாம் என்று சிறீலங்கா அரசாங்கம் நினைக்கக்கூடாது எமது மண்ணில் இன்னும் பலநூறு ஏக்கர் நிலங்களை சிங்கள இராணுவம் விழுங்கியுள்ளது-கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது!
கேப்பாபுலவு இராணுவம் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட்டுள்ளது என்று கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின்மூலம் காட்டி உலகுக்கு மாயையை ஏற்படுத்தலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் இன்னும் எமது கேப்பாபுலவு மண்ணில் பலநூறு ஏக்கர் நிலங்களில் சிறீலங்கா இராணுவம் நிலைகொண்டு எம்மை அடக்கி ஆள்வதை எமது தொடர் போராடடம் மூலம் நாம் உலகுக்கு எடுத்து காட்டுவோம்.
எமது சொந்த மண்ணில் கால் பதிக்கும் நாள் வரை இந்த வீதியிலே இருந்து சற்றும் நகராது போராடுவோமென கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு சிறீலங்கா இராணுவ தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.