நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். விவசாயத்தையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் காத்துக் கொள்ள இறுதி வரை போராடுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த மக்களுக்கு மாணவர்கள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. எனினும மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான கிணறுகள் என்பதை கிராம மக்கள் அறியவில்லை. மத்திய அரசு அனுமதி தற்போது கடந்த 15 நாள்களுக்கு முன்பு நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்போது பொங்கி எழுந்த மக்கள் முக்கனிகள் விளையும் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி கடந்த 14 நாள்களாக போராடி வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் போராட்டம் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளித்து மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர். புதுக்கோட்டை மக்களுக்கு அண்டைய மாநிலங்களில் இருந்து மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினை போல் இதையும் தமிழர்களின் பிரச்சினையாக பாவித்து போராட்ட களத்துக்கு சாரை சாரையாக மக்கள் கூட்டம் வந்தவண்ணம் உள்ளனர்.
Home
தமிழகச்செய்திகள் புதுக்கோட்டை நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட போராட்டத்துக்கு தடையை மீறியும் குவியும் மக்கள்