புதுக்குடியிருப்பு நகரமத்தியில் மக்களுக்கு சொந்தமான 19ஏக்கர் காணிகளை கையகப்படுத்தியுள்ள சிறிலங்கா படையினர் அதனை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமெனக்கோரி கடந்த சில வாரங்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் போராடடத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச மக்களின் காணிகளை விடுவிக்க கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து இன்று (28) அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களின் முன்னிலையில் சந்தித்து மூன்று தவணை அடிப்படையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக 7.25 ஏக்கர் காணியும் எதிர்வரும் 4ம்திகதியும் இரண்டாம் கட்டம் 10ஏக்கர் காணி மூன்று மாதகாலப்பகுதியிலும் மிகுதி 2ஏக்கர் காணி ஆறு மாத காலப்பகுதியில் விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டு மக்களிடம் பிரதேச செயலாளர் அவர்களால் எழுத்து மூலமாக ஆவணம் உறுதிப்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இவ்வாறு உறுதி மொழியை ஏற்று இன்றுடன் போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் அவர்களாலும் பிரதேச செயலாளர் அவர்களாலும் கேட்டுக்கொள்ளப்பட்டது இவ் நிபந்தனைகளை ஏற்ற மக்கள் முதல்கட்டமாக விடுவிக்கப்படும் காணிகள் விடுவித்து தாம் தமது காணிகளுகளுக்குள் சென்ற பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக மக்கள் தெரிவித்து தொடர்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
Home
ஈழச்செய்திகள் புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்க ஆறு மாத காலகாலமாகும் என அறிவிப்பு!!