மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற ஈழத்து பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலிவணக்க நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது.
பாடல் ஒலித்த வேளை உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் உருகவைத்தது.