கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனகோரி கடந்த 29 நாட்களாக சிறீலங்காவிமானப்படை தளத்துக்கு முன்பாக வீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது சொந்த நிலங்கள் கிடைக்கும் என்ற ஆவலுடன் உரியவர்கள் பதிலுக்காக தாம் சொந்த மண்ணில் கால் பாதிக்கும் நாளை எண்ணி வீதியில் காத்துக்கிடக்கின்றார்கள்.
எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணித்துள்ளதாக இரா சம்பந்தன் மூலமாக வெளியிடப்பட்ட தகவலை அறிவித்துள்ளார். இருந்த போதிலும் சொந்த நிலத்தில் கால் பதித்த பின்பே போராட்டம் கைவிடப்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள சிறீலங்கா விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சி றுவர்கள், குழந்தைகள் , முதியவர்கள் , பெண்கள்,என அனைவரும் கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84குடும்பங்களுக்கு சொந்தமான 50ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள சிறீலங்கா விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள் செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாபுலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.
Home
ஈழச்செய்திகள் 29 ஆவது நாள் போராட்டம் -சொந்த நிலத்தில் கால் பதித்த பின்பே போராட்டம் கைவிடப் படும்