தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களி்ல் சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் கடந்த 27 நாட்களாக நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், மைத்திரியை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இரா.சம்பந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதற்கு தான் எதிரானவர் அல்ல என்று சிறீலங்கா ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்தார் என்றும்,
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் அல்லது மாற்று இடங்கள் வழங்க ப்படும் என்று மைத்திரி தம்மிடம் குறிப்பிட்டார் என்றும் ,
எனினும், புதுக்குடியிருப்பு காணிகளை விட்டு இராணுவத்தினர் இன்னும் சில நாட்களில் வெளியேறுவர் என்றும் அவர் கூறினார் என்றும் தெரிவித்த சம்பந்தர் ,
படையினர் வசம் உள்ள கிளிநொச்சி மகாவித்தியாலய காணி விடுவிக்கப்படும் என்றும் மைத்திரி தெரிவித்தார் என்று குறிப்பிட்ட சம்பந்தன் , கேப்பாப்புலவு மக்கலுக்கு மாற்று இடங்கள் வழங்கப் படும் என்று மைத்திரி தெரிவித்ததை தாம் ஆதரித்ததாகவோ அன்றி எதிர்த்ததாகவோ சம்பந்தர் எந்த கருத்தையும் தெரிவிக்க இல்லை.
Home
ஈழச்செய்திகள் கூட்டமைப்பு மைத்திரி சந்தித்துப் பேச்சு – கேப்பாப்புலவு மக்களுக்கு மாற்று காணிக்கு கூட்டமைப்பு இணக்கம்?