தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்சு பாரிஸ் பகுதியில் உள்ள சோதியா கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்கள் ஏற்றிவைக்க, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு.பொன்மலை அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மாமனிதர் எஸ்.ஜி. சாந்தன் அவர்கள் பற்றிய நினைவுரைகளும் கவிதை, பாடல் என்பனவும் இடம்பெற்றன.
நிகழ்வில் உரை நிகழ்த்திய உணர்வாளர்கள் தாம் தாயகப் பாடகர் சாந்தனுடன் இருந்த காலங்களில் இடம்பெற்ற மறக்க முடியாத அத்தியாயங்களை பகிர்ந்திருந்தமை அனைவரின் கண்களையும் நனைத்திருந்தன.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.