வவுனியா – இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து 5வது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தாம் வாழும் காணிகளையே தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் 5வது நாளாக போராட்டம் தொடர்கின்றது.
இவ் தொடர் போராட்டத்தில் சிறுவர்கள், முதியவர்கள் எனப்பலரும் இணைந்து இரவிரவாக பனியின் மத்தியிலும் தொடர்கின்றனர்.
தற்போது ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் எம்மால் இனங்காணப்பட்ட பகுதியில் 47 குடும்பங்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 மாதகால அவகாசத்தின் பின்னர் அக்காணியினை வன இலகா திணைக்களமிடமிருந்து பெற்றுத் தருவதாகவும் அது வரையில் குறித்த ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருக்குமாறும் வன இலகா அதிகாரிகளால் எவ்வித இடையூறும் எற்படாது என்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாக்குறிதியளித்தமை குறிப்பிடத்தக்கது.