தமிழீழ தாயகத்தில் கேப்பாப்புலவு மக்களால் 27 நாட்களால் தொடரும் வெகுசனப் போராட்டத்தில் வீட்டுக்கொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழீழ மக்களால் கவனயீர்ப்புப் சனநாயகப்போராட்டம் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரான்சில் பாரிசில் தினம் தினம் பல்தேசம் லட்சம் மக்கள் உல்லாசப்பிரயாணிகளாக வந்து செல்லும் சுதந்திர சதுக்கத்திலும் 15.02.2017 பிரான்சு வாழும் தமிழீழ மக்களால் கவளயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக கடந்த 22.02.2017 புதன்கிழமை நடைபெற்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் 95 மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்களின் நீண்டகால நண்பரும் ஆதரவாளருமான திரு. பிலிப் அவர்களும் கலந்து கொண்டு தனது ஆதரவினைக் கொடுத்திருந்தார்.
தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை பிரான்சு குடியரசுச்சிலைக்கு முன்பாகவும் மாலை 15.00 மணிக்கு கவயீப்புப்போராட்டம் நடைபெறவுள்ளது.
சிங்கள தேசத்தின் இராணுவத்தாலும், கடற்படையினராலும், புலனாய்வுத்துறையினராலும் அடிவருடிகளாலும் எமது மக்கள் தமிழீழ தாயகப்பிரதேசமெங்கும் கொலை அச்சுறுதலுக்கும், பயமுறுத்தலுக்கு, காரணமற்ற கைதுகளுக்கு உள்ளாகிய போதிலும் தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து குழந்தைகளும், பெண்களும், முதியவர்கள், மாணவர்கள் தமது போராட்டத்தை உறுதியோடு முன்னெடுத்து வருகின்றனர். புலத்தில் வாழும் எம் தேச உறவுகளும் தமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமது பங்களிப்பை மூன்று மணி நேரமாவது செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
அதேபோலவே 21ம் நூற்றாண்டில் மாபெரும் இனப்படுகொலையினை செய்து விட்டு அதனை மூடிமறைக்கும் வகையிலும், தனது இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையிலும் சிங்கள அரசு பகீர்தனப் பிரயத்தனப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பொய்யான வாக்குறுதிகளையும், கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை சரிவர நிறைவேற்ற முடியாத நிலையில் மேலும் தனது ஏமாற்று நாடகத்திற்கு காலஅவகாசம் கேட்கின்ற நிலையில் தற்பொழுது ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் தமிழினத்துக்கெதிராகவே தமிழர்களை பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளையும், உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை தயார் செய்து வழங்கி வருவதாகவும் பல செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன நிலையில் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழீழ மக்களால் இக்காலப்பகுதியில் பல கவயீர்ப்பு முன்னெடுக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகேட்டு ஐரோப்பிய ஒன்றிய முன்றலிருந்து 24.02.2017 வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் அமைந்துள்ள பெல்ஜியத்திலிருந்து பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஒழுங்கமைப்பில் மூன்று பெண்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு ஐரோப்பிய நாடுகள் எங்கும் சென்று தமதினத்திற்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்றும் இன்னும் 5 கோரிக்கைகளை வைத்து ஈருளி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பெல்ஜியம், லக்சம்பேர்க் , ஜேர்மனி, பிரான்சு, சுவிசு போன்ற நாடுகளில் பலதரப்பட்ட அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து எதிர் வரும் 6ம் திகதி ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகம் முன்பாக முருகதாசன் திடலில் பி.பகல் 14.00 மணிக்கு நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான போராட்டத்தில் நிறைவு செய்யவுள்ளனர்.
தமிழீழ மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் தமது வரலாற்றுக்கடமையினை செய்வதற்கு பாரிசில் இருந்து பேரூந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக தொடர்புகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு. மற்றும் தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு. தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.