ஐ.நா நோக்கி ஈருருளி பயணம் ஆரம்பம் – மூன்று பெண்கள் உட்பட ஐவர் பங்கேற்பு

0
362


எதிர்வரும் 06.03.2017 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் நபை முன்றலில் முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் பேரணிக்கு வலுச் சேர்க்கவும், ஐரோப்பிய நாடுகளுக்கு எமது தாயக மக்களின் அவலங்களை வெளிப்படுத்தவும், பெல்ஜித்தில் இருக்கும் ஐரோப்பிய பாரளுமன்றத்தின் முன்றலில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (24.02.2017) பகல் 15.00 மணிக்கு ஈருருளி பயணம் ஆரம்பமானது.
இதுவரை காலமும் இப்படியான போராட்டத்தில் ஆண்களே பங்குபற்றி வந்த நிலையில் இம்முறை பெல்ஜியத்தில் வாழும் மூன்று பெண்களும், பிரான்;சில் வாழும் இரண்டு ஆண்களுமாக ஐவர் இப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இவ் ஈருருளி பயணமானது லக்சம்பேர், ஜேர்மனி, பிரான்ஸ் ஊடாக சுவிஸ் ஜெனீவாவை வந்தடைய உள்ளது. இவர்கள் பயணிக்கும் நாடுகளில் வாழும் எம் உறவுகள் அவர்களுக்கு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
நேற்று பகல் 15.00 மணிக்கு ஈருளி பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலை ஐரோப்பியப் பாரளுமன்றத்தின் தெற்காசிய பிரிவுக்கான அரசியல் அதிகாரிகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பிரிவில் இலங்கைக்கான அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியதோடு ஈருளி பயணத்தின் கோரிக்கை அடங்கிய மனுவு கையளிக்கப் பட்டது.
அந்த மனுவில்,
1. பல தசாப்தங்களாக இலங்கைத் தீவில் சிங்கள அரசினால் நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங்கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதிகிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
2. ஈழத் தமிழ்த் தேசிய இனத்தை சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும்.
3. இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்ச்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்க வேண்டும்.
4. கருத்து வெளிப்பாடு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதேவேளை புலம் பெயர் தமிழீழ் மக்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து அனை;துலகச் சட்டங்களை மதித்து நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்து எமது மக்களையும், நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகி கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here