42 ஆயிரத்துக்கும் அதிகமானனோர் பங்கேற்ற மதுவிலக்கு மராத்தான் போட்டியை கே.டி.தியேட்டர் (சாலை ரோடு) அருகில் காலை 7 மணிக்கு கொடியசைத்து வைகோ தொடங்கி வைத்தார்.
இப்போட்டி ஜமால் முகமது கல்லூரி அருகில் நிறைவடைந்தது. மொத்தம் 5 கிலோட்டர் ஓடி வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் 10 டாக்டர்கள் அடங்கிய குழு அமைத்து மருத்துவ வசதி செய்யப்பட்டிருந்தது. மதிமுக தொண்டர்கள் மராத்தானை சீர் செய்தார்கள்.
ஆண்களுக்கான 6-9 ஆம் வகுப்பு மாணவர் பிரிவில் பி. தியாகராஜன் முதல் பரிசு பெற்றார். 10-12 ஆம் வகுப்பு மாணவர் பிரிவில் என்.சதீஷ்குமார் முதல் பரிசு பெற்றார். கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற பொதுப் பிரிவில் எம்.மணிகண்டன் முதல் பரிசு பெற்றார்.
பெண்களுக்கான 6-9 ஆம் வகுப்பு மாணவிகள் பிரிவில் இரா.திவ்யா முதல் பரிசு பெற்றார். 10-12 மாணவிகளுக்கான பிரிவில் பரிசு கு.தேவிபாலா முதல் பரிசு பெற்றார்.
கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பொதுப் பிவிரில் மு.சதானா முதல் பரிசு பெற்றார் மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன், திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரொஹையா ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.