கேப்பாபுலவில் தாமாக திரண்ட இளைஞர்கூட்டம்,வீதியில் மக்களுடன் இறங்கி போராட்டம்!

0
540

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன்(25,02) 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டமானது இன்றுடன் 26ஆவது நாளை எட்டியுள்ளது வீதியோரத்தில் வெயில் கொட்டும் பனி மற்றும் இன்னோரன்ன இன்னல்களையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும் என்ற பேராசையுடன் தொடர்கின்றது இவர்களின் அறவழிப் போராட்டம்.
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு விடுக்கப்பட்ட அறிவித்தலின் மூலம் தாமாக திரண்ட இளஞர்கூட்டம் கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்துக்கு வருகைதந்து மக்களுக்கு ஆதரவாக இன்றிலிருந்து கேப்பாபுலவில் தங்கியிருந்து போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.அத்தோடு இன்னும் இன்னும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் இளைஞர்கள் திரண்டதை போன்று கேப்பாபுலவிலும் இளைஞர் புரட்சி ஒன்றினை படைக்க முன்வருமாறு குறித்த இளைஞர்கள் வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here