நீதிமன்ற ஆலோசனைகளுக்கு அமைவாக 87 சிறுவர்கள் பாடசாலைகளில் மீள் இணைப்பு

0
236


கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு செல்லாத அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட 87 சிறுவர்களை மீளவும் பாட சாலைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த செயற்பாடுகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற ஆலோசனைகளுக்கு அமைவாக மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலிருந்து 87 வரையான சிறுவர்கள் இனங்காணப்பட்டு கிளிநொ ச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதில் பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற வரவுகளைக்கொண்ட 43 சிறுவர்களின் பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்ப ட்டுள்ளதுடன் சிறுவர்கள் பெற்றோர்களுடன் இணைக்கப்பட்டு, தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பாடசாலைகளுக்கு செல்லாத பதினொரு சிறுவர்கள் சான்று பெற்ற பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒரு சிறுமி பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 32 சிறுவர்கள் சிறுவர் இல்லங்களிலும் ஒப்படை க்கப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here