இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருநாட்டு அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பேட்டியளித்தனர்.
அப்போது ஒபாமா பேசுகையில், ‘இந்தியாவின் சிறப்பான உபசரிப்புக்கு நன்றி. மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்திலும் முன்னேற்றம் உள்ளது. ஏற்றுமதி சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்து இருவரும் ஆலோசித்தோம். இந்தியாவுடனான உறவு அமெரிக்காவிற்கு அவசியமானது.
தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப் படும். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.