கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன்(23,02) 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் உதவி பொருட்களை வழங்கும் விதமாகவும் போராட்டக்களத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை சேர்ந்த மாணவர்களும் விரிவுரையாளர்கழும் இன்றைய தினம் வருகைதந்திருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து போராடடக்களத்தில் உள்ள மக்களுக்காக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இடம்பெயர்ந்த கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராடடத்தின் மீது அரசு காட்டும் அல்டசியத்தினை கண்டிப்பதுடன் அந்த மக்கள் தமது சொந்த நிலத்துக்கு திரும்புவதற்காக காட்டும் தீர்க்கமான உறுதியினையும் கண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தலை வணங்குகின்றது.
கடந்த பல தசாப்தங்களாக போரிலே உடல்,உள ரீதியாக துன்புற்று பல இடர்பாடுகளையும் இன்னல்களையும் அனுபவித்து எதுவுமே வேண்டாம் என்ற நிலையில் தற்போது சாதாரண ஒரு இலங்கைவாழ் கிராமத்தவர் போல எளிமைவாழ்க்கை வாழவிரும்பி நிற்கும் அந்த மக்களின் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு கையளிக்குமாறு வவுனியா வளாகம் அரசையும் இராணுவத்தையும் மிக ஆணித்தனமாக கோருகின்றது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
ஈழச்செய்திகள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆதரவு!