மட்டக்களப்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டச் செயலக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை சோமசுந்தரம் வீதியில் வசித்துவரும் அரச உயர் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு சுமார் 7.15 மணியளவில் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்குள்ளான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home
ஈழச்செய்திகள் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம்