வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், இந்தியா தமிழ் மக்களை வலியுறுத்தாது என்றும், யதார்த்ததை புரிந்து கொண்டு தமிழ் தரப்புக்கள் செயற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கின்றது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறுவு செயலர் ஜெயசங்கர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியா, இலங்கையிடம் வலியுறுத்தாது என்று இந்திய வெளியுறுவு செயலர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவிக்கையில்
“வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்த வேண்டிய தார்மீக கடமை இந்திய அரசிற்கு இருக்கின்றது. அத்துடன் இந்தியாவின் நலனுக்கும் வடக்கு கிழக்கு இணைந்திருப்பதே சிறந்தது என்றபடியால், வடக்கு – கிழக்கு இணைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று ஜெயசங்கர் அவர்களிடம் கூறியிருந்தோம்.
அதற்கு அவர், வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் எங்களின் கோரிக்கையை கைவிடுமாறு இந்தியா வலியுறுத்த வில்லை எனவும், ஆனால் முப்பது வருடத்திற்கு முந்திய விடயத்தில் பிடிவாதமாக இருக்காமல் தற்போதைய யதார்த்ததை அனுசரித்து பெறக் கூடிய அதிகாரங்களை பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் எங்களின் கோரிக்கைகளுக்காக போராடுங்கள் எனத் தெரிவித்திருந்தார்’ என்று சுரேஷ் தெரிவித்துள்ளார்
Home
ஈழச்செய்திகள் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்த வேண்டிய தார்மீக கடமை இந்திய அரசிற்கு இருக்கின்றது – சுரேஷ்