கடந்த மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பு இன்று (22) ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது கொலைச் சம்பவத்தை நேரில் கண்கண்ட சாட்சியான சிறுவன் அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டி யிருந்தார்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர்களின் முதலாம் நபரது இரத்த மாதிரியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த சந்தேகநபரை யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுமதிக்குமாறும் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை விளக்கமறி யலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.