
இது தொடர்பில் தெரியவருவ தாவது, கிளிநொச்சி டிப்போவிற்குச் சொந் தமான இ.போ.ச.பேருந்து யாழ்ப் பாணத்திலிருந்து வட்டக்கச்சிக்கு புதிதாக நேற்றைய தினம் சேவை யில் ஈடுபடுத்தப்பட்டது.
இதனால் அப்பேருந்திற்கு வட் டக்கச்சியில் வைத்து இனந்தெரி யாத நபர்கள் கல்வீச்சுத்தாக்கு தலை நடத்தியிருந்தனர்.
இதனால் கிளிநொச்சி இ.போ.ச. முகாமையாளர் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான சாலை யில் நிறுத்தப்பட்டிருந்த தனியா ருக்குச் சொந்தமான பேருந்து களை அப்புறப்படுத்துமாறும் தாம் வேலி அமைக்க வேண்டுமெனவும் கடும் கோபமாக கூறியுள்ளார்.
கிளிநொச்சி நகரில் பேருந் து கள் தரித்து நிற்பதற்கு பேருந்து நிலையம் இதுவரை அமைக்கப்பட வில்லை.அத்துடன் காணியும் வழ ங்கப்படவில்லை.
மக்கள் மீள்குடியேற்றத்தை யடுத்து டிப்போ காணியின் பகுதி யில் இ.போ.சபையினருக்குச் சொந் தமான பேருந்துகளும் தனியாரு க்கு சொந்தமான பேருந்துகளும் தரித்து நின்றன.
திடீரென அவ் விடத்தை விட்டு தனியார் பேருந்துகளை வெளி யேற்றுமாறு கூறுவது பொருத்த மற்ற செயற்பாடாகுமென தனி யார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி தனியார் பேருந்து சங்கத்தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 5 வருட காலமாக வட்ட க்கச்சி பகுதிக்கான வீதிகள் புனரமைக்கப்படாத நிலையிலும் கூட மக்களுக்கான பேருந்து போக்குவரத்து சேவையை தனியாரே வழங்கியதாகவும் தற்போது இ.போ. ச.பேருந்து சபையினர் குத்தகை அடிப்படையில் பேருந்துகளை கொள்வனவு செய்துவிட்டு கடன் தொகையை செலுத்துவதற்கு நேர அட்டவனையைப் பின்பற்றாது சேவையில் ஈடுபடுவதனால் தமக்கும் இ.போ. ச.பேருந்து சபையினரும்க்கும் இடை யில் பிரச்சினை இடம்பெறுவதாக வும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் கிளிநொச்சி நகரில் பேருந்து நிலையம் இல்லாமை யால் தாம் பல்வேறு அசெளகரிய ங்களை எதிர்கொள்வதாகவும் சம்ப ந்தப்பட்ட தரப்பினர் இவ்விடயத்தில் அக்கறை கொண்டு சிறந்த தீர் வைப் பெற்றத்தர ஆவன செய்ய வேண் டுமென அவர் கேட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கிளி நொச்சி மாவட்ட இ.போ.ச. முகா மையாளர் எஸ்.ஜீவாநந்தனை தொட ர்பு கொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்ட செயல கத்தின் அனுமதியின்படி இ.போ.ச. பேருந்து பயணிக்கும் போதே வட்ட க்கச்சியில் வைத்து கல்வீச்சு தாக் குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தான் தனியார் பேரு ந்துகளை இ.போ.ச. காணியிலி ருந்து அகற்றுமாறு இ.போ. சாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் களும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை காலமும்இ.போ.ச தனியார் பேருந்து என்பன ஒரே காணியில் தான் தரித்து நிற்கின் றன. இ.போ.ச. பேருந்து மீதான கல்வீச்சே தொழிலாளர்கள் கிளர் ந்தெழக் காரணமாகிவிட்டது என் றார்.