கேப்பாபுலவு- புதுக்குடியிருப்பு வாழ் மக்கள் தாம் வாழ்ந்த நிலங்களை மீட்கும் போராட்டத்தில் 2 வாரத்துக்கு மேலாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்களாகிய நாம் ஆங்கிலேயர் எமது மண்ணை கைப்பற்றி காலத்தில் இருந்து பின் சிங்கள அரசாட்சிகள் இனஅழிப்பை முன்நகர்த்தும் முகமாக இன்று வரை எமது நிலங்களை தமக்குள் கையகப்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வியலை, வாழும் உரிமையை அழித்துக்கொண்டு வருகிறார்கள்.
முள்ளிவாய்கால் இனஅழிப்பு போரின் பின் ஈழத் தமிழர்களாகிய நாம் பிரான்சில் பாரிஸ் நகரில் மே 27 2009 முதல், வாரம் தோறும் புதன்கிழமைகளில் பிரஞ்சு பாராளுமன்ற முன்றதிலும், சர்வதேச தூதரங்கள் முன்பும் எமது மக்களுக்கு நீதியான தீர்வு வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு வரை வேற்று இனமக்களுடன் சேர்ந்தும் தொடர் போராட்டங்களை நடாத்தி வந்தோம், 2016 ஆண்டும் பல மாதங்கள் தொடர் போராட்டங்களை நடாத்தி வந்தோம். காலத்தின் தேவை கருதி இந்த தொடர் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.
இன்று தாயகத்தில் ஈழத்தமிழருக்கு எதிராக, நல்லிணக்கம் என்று வெளியுலகத்துக்கு காட்டிக் கொண்டு, அமைதியான போர் சூழலிலேயே தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
எமது நிலம் எமக்கு வேண்டும் – எமது நிலங்கள் எமக்கே சொந்தம் என்பதை கேப்பாபிலவு மக்கள் தமது நிலங்களை மீட்டு எடுப்பதற்காக தொடர்ச்சியாக போராடி கொண்டிருக்கும் நிலையில், இந்த நில மீட்ப்பு போராட்டத்தை சர்வேதேச பார்வைக்கு எடுத்து செல்லவேண்டிய அவசியம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு உருவாகி இருக்கிறது.
2009 முதல் சர்வதேசத்திடம் நீதியான சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தமிழ் மக்களாகிய நாம் கேட்டு போராடிக்கொண்டு இருக்கிறோம். 2014 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையினால், சர்வேதேச நாடுகளின் பிரேரணையின் அடிப்படையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, புலம் பெயர் மக்கள் அளித்த சாட்சியங்கள் ஊடாக அக்டோபர் 2015யில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் சிறிலங்காவில் தமிழ் மக்கள் அடைகின்ற துன்பங்கள் குறித்து குற்ற பத்திரிக்கை முன் வைக்கப்பட்டது.
சிறிலங்காவில் 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின், சிறிலங்கா அரசின் அரசியல் நகர்வும் – சர்வதேச வல்லரசு நாடுகளின் , அரசியல் நகர்வும் – சர்வதேச சட்டத்துக்கு அமைந்த குற்றங்களை செய்த சிறிலங்காவிடம் சர்வதேச நீதவான்கள் , வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகள் ஆகியோருடன் ஒரு கலப்பு நீதி விசாரணையை நடாத்தும் படி, பிரேரணை முன் வைக்கப்பட்டது, அதற்கு சிறிலங்கா அரசும் கையெழுத்து இட்டது.
இன்று 2017 ஆம் ஆண்டும், தாயகத்தில் எந்தவித முன்னேற்றமும் நடைபெறாமல் தமிழ் மக்கள் தொடர்ச்சியான இனஅழிப்புக்கு உள்ளாகி கொண்டு இருந்த சூழலில் வடக்கு மாகாணத்தில் ஈழத் தமிழர்கள் “எழுக தமிழ்” போராட்டத்தில் கைகோத்தார்கள்- அதன் பின் வவுனியாவில் காணாமல் போக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடு பட்டார்கள். அதை தொடர்ந்து கேப்பாபிலவு மக்கள் தொடர் , போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்கள் ” எழுக தமிழ்” என்று போராட்டத்தை நடத்தினார்கள் , புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் தமது நிலம் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் பெப்ரவரி 27 முதல் மார்ச் மாதம் 24 வரை ஐ.நா சபையின் 34 வது கூட்டத் தொடர் கூட இருக்கும் சூழலில் – சிறிலங்காவும் இந்த அமர்வில் கருப்பொருளாக இருக்கப்போகும் சூழலில் தாயக மக்களுடன் சேர்ந்து எமது போராட்டத்தை வலுவாக முன்னகர்த்த வேண்டிய கடமை ஈழத் தமிழ் மக்கள் – அனைத்துலக தமிழர் கையில் உள்ளது.
இந்த சூழலிலேயே பிரான்சு பாரிஸ் நகரில் – ஸ்ட்ராஸ்பெர்க் பகுதியில் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டன.
இதை இன்றைய முக்கிய கால சூழலில் தொடர் போராட்டமாக முன்னகர்த்த வேண்டிய அவசியம் இன்று எமக்கு உள்ளது. அதன் அடிப்படையில் .
எமது நிலம் எமக்கே சொந்தம்” என்ற சிந்தனையுடன் கவனயீர்ப்பு போராட்டம் வரும் புதன் கிழமை பெப்ரவரி 22 ஆம் திகதி பிரஞ்சு பாராளுமன்றம் – மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு . அருகாமையில் மாலை 15.00 மணி முதல் மாலை 18.00 வரை Place des Invalides பகுதியிலும் மார்ச் 01 ஆம் திகதி மாலை 15.00 மணி முதல் மாலை 18.00 வரை Place de la Republique பகுதியும், மார்ச் 6 ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் சபை முன்பும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொண்டு கேப்பாபிலவு மக்களுக்கும் தமது சொந்த மண்ணை மீட்க போராட்டத்தில் ஈடுபடும் அணைத்து மக்களுக்கும் கரம் கொடுப்போம், வாருங்கள்.எமது நிலம் மட்டும் அல்ல எமது நாடும் எமக்கு வேண்டும், சிங்கள அரசின் இனஅழிப்பு பிடியில் இருந்து நாம் விடுதலை ஆக வேண்டும் என்ற சிந்தையுடன் நாம் போராட்ட களம் இறங்க வேண்டிய காலமிது.
தொடர்ப்பு: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு – 0652725867