கடந்த அர­சாங்­கத்தின் ஊழல், மோச­டி­களை கண்­ட­றி­வது பாரிய சவால் – ரணில்

0
1230

ranil 2கடந்த அர­சாங்­கத்தின் ஊழல், மோச­டிகள் குறித்து விசா­ரணை நடத்­து­வதில் பாரிய சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். இலங்­கையில் காணப்­பட்ட வரை­ய­றை­களை நீக்­க­வுள்­ளதால் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­களை

மீண்டும் நாடு திரும்­பு­மாறு ரணில் விக்­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­துள்ளார்.

சிறு­பான்மை தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் முக்­கிய கவனம் செலுத்­தப்­படும் என சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு அளித்த பேட்­டியில் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

ஜன­வ­ரியில் இடம்­பெற்ற தேர்தல் மாற்­றத்­திற்­கான, நல்­லி­ணக்­கத்­திற்­கான தேர்தலாகும்.

வடக்கில் தமி­ழர்கள் அதிகம் வாழும் பகு­திக்கும் சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் மாகாண சபை­க­ளுக்கும் அதி­கா­ரங்­களை அதிகரிக்கவுள்ளோம்.

முன்­னைய அர­சாங்கம் சீனாவின் அர­சாங்கம் மற்றும் ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கைகள் குறித்து தற்­போ­தைய அமைச்­சர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆனாலும் எல்லை அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் தொடரும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here