சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் தமது நிலங்களை மீட்டக கடந்த 21 நாட்டகளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண ரீதியாக பாடசாலை மாணவர்கள் இன்று காலை 08.00மணி தொடக்கம் 08.30 வரை கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று கோரி இன்று யாழ் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலை மாணவிகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேப்பாபுலவு மக்களுக்கு எமது ஆதரவு,மக்களின் நிலம் மக்களுக்கே என்னும் கருப்பொருளில் இந்த கவனயீர்ப்பில் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை இன்றையதினம் மாணவர்கள் புதுக்குடியிருப்பில் இராணுவமுகாமிற்கு முன்னாலும் தமது கவனயீர்ப்பு போராட்ட த்தை மேற்கொண்டனர்.
வவுனியாவில் இந்துக்கல்லூரி, பிறமண்டு வித்தியலாயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியலாயம், தமிழ் மத்திய மகாவித்தியலாயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் தமது பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.