பிரான்சில் 10,11,12.02.2017 தினங்களில் நடைபெற்ற வன்னிமயில் 2017

0
1075


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழ்ப்பெண்கள் அமைப்பு 8 வது தடவையாக நடாத்திய வன்னிமயில் விருதுக்கான தாயக விடுதலைப்பாடற்போட்டி 2017.
10.02.2017 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் மாநகரப்பிரதேசத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை 27.03.1988 இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட வீரவேங்கை தனேந்திரனின் சகோதரியார் ஏற்றி வைத்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கம் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து வன்னிமயில் நடனப்போட்டியின் நடுவர்களாக கடமையாற்ற வந்திருந்த நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் மலர்ச்செண்டு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.


நடுவர்களாக
•மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் கொழும்பு நுகேகொடை தமிழ்வித்தியாலய முன்னாள் ஆசிரியை, கனடா ஜேர்மன் பரத கலாலயம் அதிபர் ஜேர்மன் தமிழாலயம் பரீட்சகர் நாட்டியதாரகை திருமதி சாரதா முருகையா (ஜேர்மனி) அவர்களும்.
•பரதசேத்திரா நாட்டியலயம் அதிபரும் கலாஜோதி, கலாவித்தகருமான செல்வி சரண்யா தங்கரட்ணம்(ஜேர்மனி) அவர்களும்
•தமிழாலய நடன ஆசிரியர் கலாஜோதி, கலாவித்தகருமான செல்வி. நிலானி செல்வநாயகம் (ஜேர்மனி) அவர்களும்
•நாட்டிய மயூரி, நாட்டிய கலாமணி, தமிழாலைய நடன ஆசிரியரும் கலாஜோதி, கலாவித்தகருமான செல்வி. சிறீமதி சாந்தி இரவீந்திரன்; ( நெதர்லாந்து) அவர்களும்
•நுண்கலைமானி, கலைமாமணி திருகோணமலை சிறீ கோணேஸ்ரா இந்துக்கல்லூரி முன்னாள் நடன ஆசிரியை திருமதி.யசோதா நிதர்சன் ( ஸ்ராஸ்பேர்க்) அவர்களும்
மிகச்சிறந்த முறையில் நடுவர்களாக பணியாற்றியிருந்தனர்.
போட்டிகள் முறையே மேற்பிரிவு தனி அ,ஆ,இ,ஈ பிரிவினருக்கும் மத்தியபிரிவு குழு அ,ஆ,இ,ஈ பிரிவினருக்கும் நடைபெற்றதன.
போட்டிகள் யாவும் மிகவும் விறுவிறுப்பாகவும், வெற்றியை தமதாக்கிக் கொள்ளும் வகையிலும் தாயகப்பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தமது நடனத்தை தந்திருந்தனர்.
குழு நடனத்தை தந்திருந்த போட்டியாளர்களும் தமது ஒருங்கிணைந்த நடனங்களை கொடுத்து பலத்த கரகோசத்தைப் பெற்றுக்கொண்டனர். மூன்று நாட்களும் கலந்து கொண்டு நடனப்போட்டியா ளர்களின் திறமைகளைக் கண்டு வியந்து பாராட்டிய நடுவர்கள் உணர்ச்சி மேலீட்டால் மேடையில் தொடர்ந்து பேச முடியாது உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.
இந்த குழந்தைகளின் அதி திறன்களையும் இவர்களுக்கு பயிற்சியளித்த நடன ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், ஆர்வலர்களையும் பாராட்டியிருந்தார்கள். தாம் இந்தநடனத்தைப் பார்ப்பதற்கும் இதில் நடுவர்களாக கடமையாற்ற கிடைத்தது தமக்கு கொடுத்த பெரும் பேறாகவும், பிரான்சு மக்களும், அடுத்த சந்ததியும் தமது மண்ணையும், மொழியையும், கலையையும், பண்பாட்டையும், எவ்வாறு பேணிப்பாது காக்கின்றார்கள் என்பதை இந்தப்போட்டியாளர்களின் நடனத்திறத்தின் மூலம் தாம்நிறையவே அறிந்து கொண்டதையும் தாம் எத்தனையோ மேடைகளைப் பார்த்த போதும் இது தமக்கு பெரும் அநுபவத்தையும், சந்தோசத்தையும் தந்துள்ளதாகவும் கூறியிருந்தனர்.


தமிழ்ப்பெண்கள் அமைப்பினருடன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகமும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் சிறந்த முறையில் ஒழுங்கமைப்புக்களைச் செய்து மூன்று நாள் நிகழ்வை சிறப்பாக நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
“ வன்ன மயில் விருதுக்கான போட்டி எதிர் வரும்19.02.2017 ஞாயிற்றுக்கிழமை ஓன்லிசூவ்பா என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது. 10ம் நாள் , 11ம் நாள் , 12.ம் நாள் போட்டியின் முடிவுகள்
10.02.2017 நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் :-
மேற்பிரிவு ( அ)
1ம் இடம் : செல்வி: மகேந்திரஜா சாதனா
2ம் இடம் : செல்வி: கிருபாகரன் சொபியா
3ம் இடம் : செல்வி: ஜெரோம் பெலாஜி

மேற்பிரிவு : ஆ
1ம் இடம் : செல்வன் : குணபாலன் கவிநயன்
2ம் இடம் : செல்வி: கோவிந்தராஜா  சௌந்தர்யா
3; இடம் : செல்வி: வசந்தகுமார் லேனா

மேற்பிரிவு : இ
1ம் இடம் : செல்வி : ஆனந்தகுமார் பிரியந்திக்கா
2ம் இடம் : செல்வி: உதயகுலசிங்கம் உவானா
3ம் இடம் : செல்வி: தனசிங்கம் வைஸ்ணவி , செல்வி: பாத்மராஜா லோஜிகா ( ஆகிய இருவர் பெற்றுக்கொள்கின்றனர்).

மேற்பிரிவு : ஈ
1ம் இடம் : செல்வி :துசியந்தன் தீபிகா
2ம் இடம் : செல்வி. றஞ்சன் ஜான்பிறிந்தா; செல்வி. விமலோந்திரன் கார்த்திகா ( ஆகிய இருவர் பெற்றுக்கொள்கின்றனர்).
11.02.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஈகைச்சுடரினை 26.06.1989 இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை ரூபன் அவர்களின் சகோதரி ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. போட்டி நடுவர்கள் பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளரால் மதிப்பளிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து போட்டிகள் மத்தியபிரிவு தனி அ, ஆ இ, ஈ பிரிவினருக்கும், சிறப்புப்பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெற்றன.
10.02.2017 நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் :-
மத்திய பிரிவு ( அ)
1ம் இடம் : செல்வி. மகேஸ்வரன் புளோரா
2ம் இடம் : செல்வி. ஜெகநாதன் சில்வியா
3ம் இடம் : செல்வன். காணிக்கைநாதன் ஜொய்னோல்ட்
செல்வி . சந்திரசேகரன் மிதுலானா ஆகிய இருவர் பெற்றுக் கொண்டனர்.
மத்திய பிரிவு ( ஆ )
1ம் இடம் : செல்வி. மகேந்திராஐh பார்கவி
2ம் இடம் : செல்வி. வடிவேலு ஆருதி
: செல்வி தயாபரன் சமியா ஆகிய இருவர் பெற்றுக் கொண்டனர்.
3ம் இடம் : செல்வி. றேமன் சார்ஸ்
செல்வி.லொய்சா ஆகிய இருவர் பெற்றுக் கொண்டனர்.
மத்திய பிரிவு ( இ )
1ம் இடம் : செல்வி. பத்மராஜா கோபிகா
2ம் இடம் : செல்வி. தர்மராஜா ஸ்ரோயா
3ம் இடம் : செல்வி. சுதாகர் நதுமிதா
மத்திய பிரிவு ( ஈ )
1ம் இடம் : செல்வி. பொன்னுச்சாமி விக்ரம் யூலியன்
2ம் இடம் : செல்வி. பாதவரசன் டொறின்
3ம் இடம் : செல்வி. சின்னத்தம்பி சரோன்
சிறப்புப் பிரிவு:
1ம் இடம் : இராமநாதன் அனித்தா
2ம் இடம் : மகாராசா திவ்வியா

12.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஈகைச்சுடரினை 14.03.2009 ல் வீரச்சாவையடைந்த லெப்கேணல் குரளமுதன் அவர்களின் சகோதரர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாலர் பிரிவினருக்கும் கீழ்ப்பிரிவு தனி கீழ்ப்பிரிவு குழு மேற்பிரிவு குழு அதிமேற்பிரிவு குழுவினருக்கும் போட்டிகள் நடைபெற்றன. இன்றைய நிகழ்வில் சார்சல் மாநகரசபையின் கலைப்பிரிவு முக்கியஸ்தர்களும் பலர் வந்திருந்தனர். அவர்களை தமிழர் பண்பாட்டுக்கமைய வரவேற்று மதிப்பளிக்கப்பட்டது. எதிர்கால சந்தியிலும், தமிழர்களது கலாசாரத்தை பேணிப்பாதுப்பதையும் அதற்கு உறுதுணையாக தமிழ் பெண்கள் அமைப்பின் செயற்பாடுகளை தாங்கள் பாராட்டுவதுடன் சந்தோசமடைவதாகவும் கூறியிருந்தனர்.
பாலர்பிரிவு தனி வெற்றி பெற்றோர் விபரம்
பாலர்பிரிவு
1ம் இடம் : செல்வி . இராசன் இராசேந்திரா லதிகா
2ம் இடம் : செல்வி. சிவசக்திவேல் அரிசா
3ம் இடம் : செல்வி . சுரேஸ்குமார் தமிழினி
கீழ்ப்பிரிவு ( அ )
1ம் இடம் : செல்வி . வசந்தகுமார் லேதிகா
2ம் இடம் : செல்வி . கில்மன் வெனித்தா
3ம் இடம் : செல்வி .பாலகுமாரன் கவிசா
கீழ்ப்பிரிவு ( ஆ )
1ம் இடம் : செல்வி . இராசதுரை திக்சிகா
2ம் இடம் : செல்வி . யூனேஸ் சேர்வின்
3ம் இடம் : செல்வி . சதீஸ்வரன் நிவேதா
கீழ்ப்பிரிவு ( இ )
1ம் இடம் : செல்வி .ரஐPவரட்ணம் ரெகானா
2ம் இடம் : செல்வி . மோகனராஐ; கிருத்திக்கா
3ம் இடம் : செல்வி . ரசனிக்காந்தன் வர்சித்தா
கீழ்ப்பிரிவு குழு
1ம் இடம் : சேர்ஜி  தமிழ்ச்சோலை
2ம் இடம் : செல் தமிழ்ச்சோலை
3ம் இடம் : திறான்சி தமிழ்ச்சோலை மற்றும் இவிறி தமிழ்ச்சோலையும் பெற்றுக்கொள்கின்றன.
குழு மேற்ப்பிரிவு
1ம் இடம் : குசன்வில் தமிழ்ச்சோலை
2ம் இடம் : குசன்வில் தமிழ்ச்சோலை
3ம் இடம் : கவின் கலையகம்
குழு அதிமேற்பிரிவு
1ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
2ம் இடம் : கவின் கலையகம்
3ம் இடம் : திறான்சி தமிழ்ச்சோலை மற்றும் செல் தமிழ்ச்சோலையும் பெற்றுக்கொள்கின்றன.
ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here