கேப்பாப்புலவு மக்களின் உரிமைப் போராட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி 15/02/2017 ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக கவனயீர்ப்புப்போராட்டம்!

எம் தமிழினத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் தமிழினப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்பை உடன் தடுத்து நிறுத்த கோரி கேப்பாப்புலவு மக்களின் உரிமைப் போராட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும். 

இந்த வகையில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் தமிழின அழிப்பு தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றம் Allée du Printemps, 67000 Strasbourg
முன்பாக 15.02.2017 புதன் கிழமை பிற்பகல் 15.45 மணித்தொடக்கம் 17.00 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.