கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது;ஆனாலும் மாகாண சபை விடயத்தில் தலையிட விரும்பவில்லை- மைத்­தி­ரி

0
126

maithripala-srisena-6600கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைக்கும் கார­ணங்கள் நியா­ய­மா­னவை எனினும் மாகாண சபை விட­யங்­களில் தான் தலை­யிட விரும்­ப­வில்லை என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­ப­கரமான சூழ்­நி­லையில்

நேற்­றைய தினம் புதன்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் உள்­ளிட்ட உயர் பீட உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்ள நிலையில் இன்று நடை­பெறும் இச் சந்­திப்பு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இந்தச் சந்­திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் சந்­தித்து பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யி­லேயே கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி இன்று சந்­திக்­க­வுள்ளார்.

நாட்டில் புதிய ஜனா­தி­ப­தியின் தெரிவும், புதிய ஆட்­சி­ய­மைப்பும் பல்­வேறு மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருக்கும் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நிய­மனம் தொடர்­பாக பல்­வேறு கருத்­துக்கள் நிலவி வரு­கின்­றன. இந்த நிலையில் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள சந்­திப்பு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்­த­வ­ரையில் 11 ஆச­னங்­களைக் கொண்ட தமிழ்த்

தேசியக் கூட்­ட­மைப்பு முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­ய­வற்­றுடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது தொடர்பில் கடந்த சில வாரங்­க­ளாக பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன.

ஆனால் முஸ்லிம் காங்­கிரஸ் தமது கட்­சிக்கு முத­ல­மைச்சர் பதவி தரப்­பட வேண்டும் என கோரு­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முத­ல­மைச்சர் பதவி தமக்கு வேண்­டு­மென கோரி வரு­கின்­றது. இதனால் பேச்­சுக்கள் தோல்­வி­ய­டைந்­துள்­ளன.

கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கூடி­ய­போது, இரு தரப்பு சார்­பிலும் 30 உறுப்­பி­னர்கள் சமுக­ம­ளித்­தி­ருந்­தனர். இருப்­பினும் எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு சபை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகாண சபை தவி­சாளர் ஆரி­ய­வதி கலப்­பதி தலை­மையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.30 மணி­ய­ளவில் கிழக்கு மாகாண சபை அமர்வு ஆரம்­ப­மா­னது.

ஆளும் தரப்­புக்கு பெரும்­பான்மை இல்­லாத போதிலும் மக்கள் நலன் கருதி 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்கு ஆத­ர­வ­ளிப்­பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தீர்­மா­னித்­தி­ருந்­தது. அக்­கட்­சியின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார்.

எனினும் ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­வது உள்­ளிட்ட நிதி விவ­கா­ரத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன கிழக்கு மாகாண சபை நிர்­வா­கத்­திற்கு ஒரு மாத காலம் விசேட அனு­மதி வழங்கி- அதற்­கான பணிப்­பு­ரையை விடுத்­தி­ருப்­பதால் அமர்வில் குறித்த வரவு செலவுத் திட்­டத்தை நிறை­வேற்ற வேண்­டிய தேவை இல்லை எனக்­க­ருதி இந்த அமர்வை ஒத்­தி­வைக்­கு­மாறு கோரு­கின்றேன் எனவும் தெரி­வித்தார். இதனைத் தொடர்ந்து சபை அமர்வை பெப்­ர­வரி 10ஆம் திக­திக்கு ஒத்­தி­வைப்­ப­தாக தவி­சாளர் அறி­வித்தார்.

இதன்­படி கிழக்கு மாகாண சபையின் அமர்­வொன்று மூன்­றா­வது தடவை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த டிசம்பர் மாதம் இடம்­பெற்ற சபை அமர்­வின்­போது முத­ல­மைச்சர் நஜீப் அப்துல் மஜீத் 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தை சமர்ப்­பித்து வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­டி­ருந்த நிலையில் அந்த அமர்வு இம்­மாதம் 12ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்கும் தீர்­மா­னத்தை மேற்­கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கிழக்கு மாகாண சபை­யிலும் ஆத­ரவை விலக்கிக் கொண்­டதைத் தொடர்ந்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கிழக்கு மாகாண சபையில் பலம் இழந்­துள்­ள­தை­ய­டுத்து ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை கார­ண­மா­கவே சபை அமர்­வுகள் ஒத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த அதி­கார இழு­பறி கார­ண­மாக கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டம் நிறை­வேற்­றப்­ப­டா­ததால் கிழக்கு மாகாண அரச சேவை ஊழி­யர்­களின் ஜன­வரி மாத சம்­பளம் வழங்­கு­வ­திலும் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருந்­தது.

எனினும் ஜனா­தி­பதி விடுத்­துள்ள விசேட பணிப்­பு­ரையின் பேரில் சம்­பளம் வழங்­கு­வ­தற்­கான மாற்று ஏற்­பா­டு­களை மாகாண ஆளுநர் மேற்­கொண்­டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் அதிகாரப்பிரச்சினை இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் சந்திப்புடன் நிறைவுக்கு வரலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களே கலந்து கொள்வார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here