நாட்டில் நல்லாட்சியா? இராணுவ ஆட்சியா?சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி
நல்லாட்சி நிலவுகின்றதா இராணுவ ஆட்சி நிலவுகின்றதா என்பதை அறிய விரும்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காணி பாரதீனப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய சிவசக்தி ஆனந்தன், மேலிடத்தில் இருந்து உத்தரவு வழங்கும் பட்சத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என விமானப்படை அதிகாரி கூறுவதாக குறிப்பிட்டார்.
பொதுமக்களின் காணிகள் என உறுதிப்படுத்தப்பட்டால் அதனை விடுப்பதாக விமானப்படை அதிகாரிகள் கூறுவார்கள் ஆயின் காணிகளை வழங்கும் அதிகாரம் விமானப்படைக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாகம் உள்ளதாக குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், காணி வழங்கும் அதிகாரம் விமான ப்படைக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ஆட்சியில் நிலவு இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே மக்கள் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
எனினும் தேசிய அரசாங்கத்திலும் இராணுவ ஆட்சியே நீடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மீள வழங்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை அந்த வாக்குறுதி நிறை வேற்றப் படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வலிகாமத்திலுள்ள காணிகள் ஆறு மாதகாலத்திற்குள் ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கிய போதிலும் ஒரு வருடங்கள் கடந்துள்ள போதிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பி ட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை கூட அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டினார்.