முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத நிலையில் அக்கிராம மக்கள் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலா ளரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள சிறீலங்கா இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது சொந்த காணிகளிற்குள் கால் பதி க்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு கலைஞர்கழகம், விளையாட்டுகழகம்,மற்றும் கிராம அபிவி ருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
Home
ஈழச்செய்திகள் சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளை வெளியேறகோரி கேப்பாபுலவு – புதுக்குடியிருப்பில் போராட்டதங்கள்