தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு ஜயந்த கெட்டகொட ஆணையாளரிடம் கடிதம்!

0
116

-sarath-fonsekaமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு ஜயந்த கெட்டகொட முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் சட்டப் பிரிவிடம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள் குறித்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டப் பிரிவினரிடம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குமாறு ஜயந்த கெட்டகொட நேற்று முன்தினம் புதன்கிழமை தேர்தல்கள் ஆணையாரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு சரத் பொன்சேகா தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்தக் கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கெட்டகொட கூறியுள்ளார்.

மேலும் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் அந்த வெற்றிடத்திற்கு சரத் பொக்சேகா நியமிக்கப்படுவாரா என்று அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கெட்டகொட கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here