மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

0
267

மட்டக்களப்பு நகரில் தமிழ் சிங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், என்.சிறீநேசன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர்.
ஊடகப்பணியில் ஈடுபட்டு படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசிங்க, நடேசன், நிர்மலராஜன, சிவராம் உட்பட பலரின் உருவப்படங்களையும் இவர்கள் ஏந்தியிருந்தனர்.
2006ஆம் ஆண்டு திருமலையில் ஜனவரி 24 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் படுகொலைக்கு இதுவரையில் தீர்வுகள் கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினர்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மட்டக்களப்பு குருமண்வெளியில் பிறந்த சுப்பிரமணியம் சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளர் தனது தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்த நேரத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி இனம் தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here