தமிழர் வாழ்வியலை உருக்குலைப்பது தான் தேசிய பாதுகாப்பா? வன்னி எம்.பி.சி.சிவமோகன்

0
135

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பிரதேசம் பூராகவும் பூரண கர்த்தால். மக்கள் போராட்டம் முல்லைத்தீவில் வெடித்தது. பொறுத்திருந்த மக்கள் சிறீலங்கா இராணுவ காணி அபகரிப்பை எதிர்த்து வீதிக்கு இறங்கினார்.
மேற்படி போராட்டம் பற்றி வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் முல்லை மக்களின் வாழ்வியல் பிரதேசங்களை சிறீலங்கா இராணுவம் ஆக்கரமிப்பது அநீதியானது, அராஜகமானது என்றார்.


முல்லைத்தீவு மக்களின் வாழ்வியலை உருக்குலைப்பதற்கு மறுபெயர் தேசிய பாதுகாப்பு என்றால் அதையும் உடைத்தெறிய மக்கள் போராடுவது தவிர்க்க முடியாதது. புதுக்குடியிருப்பு நகர மத்தியின் முகாம், கேப்பாப்பிலவு முகாம் மற்றும் கிழக்கு முள்ளிவாய்க்கால் முகாம் போன்றவை மக்களின் வாழ்வியல் பிரதேசங்களை ஊடுருவி அமைக்கப்பட்டவை.
சிறீலங்கா இராணுவம் உடன் வெளியேறாவிட்டால் மக்கள் சிவில் அரச நிர்வாகத்தை முடக்கும் நிலைக்கு சென்று விடுவர்;. உடன் நல்லாட்சி அரசு உரிய தீர்வுகளை வழங்கி சிறீலங்கா இராணுவத்திற்கென அரச காணிகளை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும்.


இப்படியான அராஜகங்களை தென் பகுதியில் இந்த அரசால் நிறைவேற்ற முடியுமா? இது தான் எமது இனப்பிரச்சினை. தமிழர் தமது சுய நிர்ணய உரிமை கோரி போராடும் நிலையை உருவாக்கியது மாறி மாறி வந்த இனவாத அரசுகளே. முல்லை மண் ஆக்கிரமிப்பு சர்வதேசத்திற்கு கேட்குமா? நான் அறியேன். ஆனால் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட தமிழர் விடுதலை போராட்டத்தின் மைய பொருளுக்கு ஒரு நாள் சர்வதேசம் பதில் சொல்லும் காலம் வரும். அது வரை எமது மக்கள் போராடும் உறுதி கொண்டதை முல்லை வீதி எங்கும் நான் பார்த்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here