முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா விமானப்படையால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள தமது வாழ்வாதார கனிகளை விடுவிக்க மகள் முன்னெடுத்துள்ள போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது.
84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றையதினம் கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மக்களின் போராட்டம் நியாயமா னது எனவும் தமது பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை யாழ் பல்கலை கழக வணிக பீட மாணவர் ஒன்றியம் கேப்பாபுலவு மக்களை நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித் துள்ளனர். இதன் போது மாணவர் சார்பில் கருத்து தெரிவித்த மாணவர் பிரதிநிதி இம்மக்களின் வாழ்வாதாரத்தை சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் , ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்து வெளியேறா விட்டால் பல்கலை கழக மாணவர்களும் இவர்களின் போராட்டத்தில் இணைத்து கொள்வோம் எனவும் சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.