இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் அரசின் புதிய நடவடிக்கைகள்!

0
120

imageபிரான்ஸில், உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய , பரந்துபட்ட அதிகாரங்கள் கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிர் நடவடிக்கைகளை, பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட உளவு ஏஜெண்டுகள் ஆட்சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் மானுவெல் வேல்ஸ் கூறினார்.

பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் நல்லமுறையில் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள் குறித்த மேலும் விவரமான தரவுகள் கொண்ட தகவல் தளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ராணுவத்தில் 7,500 பணியிடங்களை வெட்டும் திட்டங்கள் இனி தொடர்ந்து அமலாக்கப்படாது என்று அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து தெரிவித்தார்.

பாரிசில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு யூத பெருவணிக அங்காடியில் நான்கு வாடிக்கையாளர்களையும், ஒரு பெண் போலிஸ்காரரையும் கொலை செய்த இஸ்லாமியத் துப்பாக்கிதாரியான அஹ்மதி குலிபாலிக்கு உதவி செய்ததாக நான்கு பேர் மீது அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here