மாமனிதர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளாரா?

0
139

சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அவர் அரசியலில் இறங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளவுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரங்களுடன் தொடர்புடைய பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரவீனா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
25 வயதான பிரவீனா ரவிராஜ், பிரித்தானியாவில் சட்டப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு அண்மையில் நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை நடராஜா ரவிராஜ், 2006ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்று அவர் அரசியலில் இறங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளவுள்ளார். அவருக்கு இளைஞர் விவகாரங்க ளுடன் தொடர்புடைய பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரவீனா ரவிராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
25 வயதான பிரவீனா ரவிராஜ், பிரித்தானியாவில் சட்டப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு அண்மையில் நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த சிறீலங்கா அரசுடன் ஒத்துப்போகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து இவர் பயணி ப்பாரா என்பது சந்தேகமே ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here